ஆளுநர் அதிரடி - 24 மணித்தியாலங்களுக்குள் ஆங்கில ஆசிரியர் நியமனம்
2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. ஆளுநரின் அதிரடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் 6 வருடங்களுக்கு மேல் ஒவ்வொரு நாளும் இந்த நியமனத்திற்காக காத்திருந்ததாகவும், இந்த நியமனம் எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இதன் போது ஆசிரியர்கள் கருத்து வெளியிடுகையில், “எமக்கு பின்னர் ஆசிரியை பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கூட நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எமது நியமனம் குறித்து நாம் கடந்த கால ஆளுநர்கள், அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு வெற்றிபெற்றும் எமக்கு நியமனம் வழங்கப்படுவில்லை, தொடர்ந்து இழுத்தடிப்புகள் இடம்பெற்று வந்தது. ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு அவர் நியமனங்களை வழங்கியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த எமது குடும்பம் இந்த நியமனத்தின் மூலம் இனி ஓரளவு மூச்சுவிடும் எனவும், இந்த நியமனம் எமது வாழ்க்கைக்கு அர்த்தம் பெற்று தந்துள்ளது. எமக்காக கடவுளை வணங்கும் போது இனிமேல் ஆளுநருக்காகவும் சேர்த்து வழிபடுவேன் என தெரிவித்தார்.”
இதேவேளை, ஆசிரியர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவந்ததுடன், நீண்டகாலமாக எமக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தது. தனது மகன் தனக்கு இனிப்புகளை (sweet)வாங்கித்தருமாறு அடிக்கடி கூறுவார். ஆனால், பொருளாதார பிரச்சினைகள் காரணமாக வாங்கிக்கொடுக்கவில்லை . இன்றைய தினம் நியமனம் கிடைத்துள்ளது மகிழ்சியுடன் வாங்கி செல்வேன் என்றார்.
கிழக்கு ஆளுனரின் இந்த தீர்மானம் மிகவும் பாராட்டத்தக்கது. அதிகாரிகள் தகுதியுடையவர்களை சொந்த காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கட்ட இந்த அப்பாவி மக்களைப் பலிவாங்கும் தீய செயல்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஆளுனரின் செயலை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். இதோ போல் பொதமக்களின் தேவைகளைச் சரியாக இனம் கண்டு அவற்றைத் தீர்த்துவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டால் உங்கள் பதவிக்காலம் சிறப்பாக இருப்பது மட்டுமல்ல மக்கள் மனதில் நீங்கள் என்றும் தங்கியிருப்பீர்கள்.
ReplyDelete