Header Ads



ஐஸ்லாந்தில் ஒரேநாளில் 2,200 நில அதிர்வுகள்


ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை (Reykjavik) சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் (நேற்று)  2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. 


இதனை ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது. 


Fagradalsfjall மலையின் கீழாக உள்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு நில அதிர்வுகள் ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து, 24 மணித்தியாலங்களில் 2,200 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. 


இதன் காரணமாக எரிமலை வெடிக்கும் ஆபத்து உள்ளதாக IMO எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Fagradalsfjall மலையானது எரிமலை அமைப்பின் மேல் உள்ளதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு இரண்டு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. 


தற்போது 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், 4 ரிக்டர் அளவில் மிகப்பெரிய அதிர்வு தென்மேற்கு ஐஸ்லாந்து பகுதியில் ஏற்பட்டுள்ளது. 

 

இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-இல் ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த Fagradalsfjall மலை அருகே எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருந்தது. 

No comments

Powered by Blogger.