Header Ads



21,000 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு தப்பிச்சென்ற கார்


கொட்டாவ-சித்தமுல்லை பெட்ரோல் நிரப்பும் நிலையமொன்றுக்கு காரில் வந்த ஒருவர், எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.


குறித்த நபர் 21,320 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு QR குறியீட்டை காண்பிப்பதாக கூறி பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.


இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த காரின் இலக்க தகடு போலியானது என்பது தெரியவந்துள்ளது.


கார் எரிபொருளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.