200 மில்லியன் டொலர்களை மானியமாகப் பெற திட்டம் போட்டுள்ள அரசாங்கம்
உலக வங்கியுடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு சிறந்த இலக்கு வருமானம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியுடன் கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மே மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கடன் மானியத்தைப் பெறுவதற்காக உலக வங்கி குழுவின் சர்வதேச அபிவிருத்தி தீர்ப்பாயத்துடன் தொடர்புடைய உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சனாதிபதியின் பிச்சைப்பாத்திரத்துக்கு கபினட் ஆமா சாமி போடுவானுகள். நாட்டிலுள்ள ஏழைகள்,வறுமைக்கோட்டின் கீழுள்ள அப்பாவி மக்களைக் காட்டி பெறப்படும் இப்பணத்தில் எத்தனை வீதம் அந்த அப்பாவி மக்களுக்குப் போய்ச் சேரும் எனக்கேட்டால் அதற்கு யாரிடமும் பதிலில்லை. மந்திகளும் மகோடிஸ்களும் சேர்ந்து எவ்வளவு தொகையைப் பங்கு போட்டுக் கொண்டார்கள் என்ற செய்தி எங்கும் இருக்காது.
ReplyDelete