Header Ads



அடுத்த 20 வருடங்களுக்கு பசில்தான் நாட்டை ஆட்சி செய்வார் - பேராசிரியர் ரஞ்சித்



எதிர்வரும் இரண்டு தசாப்த காலத்திற்கு பசில் ராசபக்ச இந்த நாட்டை ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.


கடந்த மே தினம் அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேடைக்கு மேள தாளத்துடன் அழைத்துவரப்பட்ட  தலைவரே எதிர்வரும் இரண்டு தசாப்தங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வார் என அவர் சூசகமாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


மேலும், அந்த தலைவரின் பெயர் மூன்று எழுத்துக்களைக் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது நாட்டை பாதுகாப்பதற்காக சிறிய ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒன்று நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் குழப்பமடைந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட்டதாக வாய்ச்சவடால் விட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

No comments

Powered by Blogger.