பிக்குவையும், 2 பெண்களையும் தாக்கிய 8 பேருக்கு விளக்கமறியல்
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (8) கடுவலை நீதிவான் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கும் இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment