Header Ads



இஸ்லாத்தின் படி வாழ விரும்புவதால் ஓய்வு - 18 வயது வீராங்கனை அதிரடி அறிவிப்பு


பாகிஸ்தான் வீராங்கனை 18 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


மகளிர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 30 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளவர் ஆயிஷா நசீம்.


அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய 18 வயதே ஆகும் இவர், கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்லாத்தின் படி தனது வாழ்க்கையை வாழ விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆயிஷா தெரிவித்துள்ளார். 


பாகிஸ்தான் அணியின் சிறந்த ஹிட்டரான ஆயிஷா இந்த அறிவிப்பு அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.


2020ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் 34 சர்வதேச போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார்.


இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அதிராடியாக 25 பந்தில் 43 ஓட்டங்கள் எடுத்தது ஆயிஷாவின் சிறந்த ஆட்டம் ஆகும். 

No comments

Powered by Blogger.