Header Ads



164,185,000 ரூபாவை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவனும், மனைவியும்


நிதி நிறுவனமொன்றை நடத்தி 164,185,000 ரூபாவை மோசடி  செய்த குற்றச்சாட்டில் சக்வித்தி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (19) குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.


சட்ட மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்றைய தினம்  (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெட்டபந்தி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.


இதன்படி, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக பிரதிவாதிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.


அதன் பின்னர்,  தலா 50 இலட்சம் ரூபாய் வீதம்  மாதாந்த தவணைகளில் உரிய தொகையை செலுத்துவதற்கு பிரதிவாதிகள் நீதிமன்றில் ஒப்புக்கொண்டனர்.


இதன்படி, முதல் தொகை  இன்று செலுத்தப்படும் என, பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

1 comment:

  1. களவாடிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதால் தப்பிவிடமுடியாது. செய்த குற்றத்துக்கான சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.