15 மில்லியனை நட்டஈடாக செலுத்தினார் மைத்திரி - எஞ்சியதை செலுத்த கால அவகாசம்
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 சம தவணைகளாக செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலைகாரன்களை சிறையில் இருந்து வௌியேற்ற இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நான்கு கோடி பணமும் எங்கே, சனாதிபதியாக இருக்கும் போது இரவோடு இரவாக சுகபோக கார்களை இறக்குமதி செய்து சுங்கத்திணைக்களத்துக்கு ஓட்வைிட்ட கோடான கோடிகள் எங்கே என இந்த கள்ள மை3யிடம் பொதுமக்கள் கேட்கின்றனர்.
ReplyDelete