Header Ads



15 மாத குழந்தை எவ்வாறு உயிரிழந்தது..? (இது ஒரு விழிப்புணர்வு பதிவு)


தலஹாகம, அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு வயதும் 15 மாதக் குழந்தையொன்று சிறிய குப்பியொன்றின்


மூடி தொண்டைக்குள் இறுகி உயிரிழந்துள்ளது. தலஹாகம, கஜுஹேனை 195ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த கே.ஜி. நெஹென்சா சேனாதீர என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


தலையிடிக்காக பூசும் சிறிய களிம்பு குப்பியின்மூடியொன்றே இவ்வாறு தொண்டையில் இறுகியுள்ளது. 


சம்பவத்தின் போது அவரது தாயார் சமையலறையிலும், குழந்தை 07 வயதுடைய மூத்த சகோதரனுடனும் வீட்டில் இருந்துள்ளது. இவரது பாட்டி வீட்டுக்கருகிலுள்ள காணியில் தேயிலை கொழுந்து பறிக்க சென்றுள்ளார்.


சிறிய தங்கையின் வாய்க்குள் போட்ட மூடி தொண்டையில் சிக்கியிருப்பதைக் கண்ட அண்ணன் அதை அகற்ற முயன்று தோல்வியடைந்தார். இதை அண்ணன் சத்தம் போட்டு தாயிடம் கூற, தந்தை, பாட்டியும் வந்து தொண்டையில் சிக்கிய மூடியை எடுக்க முயன்றனர். 


பின்னர், சிறுமியை கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.