இம்ரான் கானுக்கு எதிரான வழக்குகள் 150 ஐ நெருங்கியது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அம்மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இம்ரான் கான் மீது ராணுவ தலைமையகம் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 3 வழக்குகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. தற்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து இம்ரான் கானுக்கு எதிரான வழக்குகள் 150-ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment