இளைஞரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, தங்க நகைகள் கொள்ளை
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இளைஞர் ஒருவரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, அவரிடமிருந்து 150,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் நேற்று சனிக்கிழமை (29-07-2023) மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் ரப்பர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த நபர் இளைஞரின் ஆடைகளை அகற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment