Header Ads



சீதனத்திற்காக 150 ஆண்களால் நிராகரிக்கப்பட்ட ஆசிரியை


இந்தியாவில் 1961ஆம் ஆண்டிலேயே வரதட்சணை சட்டவிரோதமாக்கப்பட்டு விட்டது.


ஆனால் இன்றளவும் இந்தியாவில் நடக்கும் பல திருமணங்களில் மணப்பெண்ணின் குடும்பம் மாப்பிள்ளையின் குடும்பத்துக்கு தங்கமும் ரொக்கப்பணமும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதை எதிர்த்து, மத்திய பிரதேசத்தின் போபால் நகரத்தில் வசிக்கும் 27 வயதான ஒரு ஆசிரியை, ஒரு மனு அளித்திருக்கிறார். திருமணம் நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் காவல் துறையினரை நிறுத்துவதன் மூலமும், சோதனைகள் நடத்துவதன் மூலமும் வரதட்சணையை ஒழிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். BBC


இதைத் துவங்கிய குஞ்ஜன் திவாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இந்த மனு, தனது அனுபவங்களின் மூலமே துவங்கியது என்கிறார். வரதட்சணை கொடுக்க மறுத்ததால், இதுவரை பல டஜன் ஆண்கள் இவரை திருமணம் செய்ய மறுத்திருக்கின்றனர்.


குஞ்ஜனின் தந்தை அவரைப் பெண் பார்ப்பதற்காக ஒரு மாப்பிள்ளைகள் அவர் குடும்பத்தையும் வீட்டுக்கு வரவழைத்திருந்தார்.


அவர்களை வரவேற்றுச் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த பின், குஞ்ஜன் கையில் தேநீரும் சிற்றுண்டியும் சுமந்துகொண்டு அவர்கள் அமர்ந்திருந்த ஹாலுக்குச் சென்றார்.


அந்தத் தருணத்தை அவர் மிகவும் ‘அசௌகரியமான’ தருணம் என்கிறார். “எல்லோரும் உங்களையே முறைத்துப் பார்க்கின்றனர். கண்களால் உங்களை எடைபொடுகின்றன்ர்,” என்கிறார்.


மாப்பிள்ளை வீட்டார் முன் குஞ்ஜன் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்று அவரது பலநாள் திட்டமிட்டிருந்தனர். அவரது தாய், அவருக்கு எடுப்பான ஒரு பச்சை நிற உடையைத் தேர்ந்தெடுத்திருந்தார். அவரது தெறுப்பல் வெளியே தெரிந்துவிடாமலிருக்க, அவரை சிரிக்க வேண்டமென்றும் சொல்லியிருந்தனர்.


ஆறு வருடங்களில் ஆறு முறை இந்தப் பெண்பார்க்கும் படலம் அவரது வாழ்வில் நிகழ்ந்திருந்ததால், அவருக்கு இவையனைத்தும் பரிச்சயம் தான். அவரிடம் அவரது படிப்பைப் பற்றியும், வேலையைப் பற்றியும், அவருக்குச் சமைக்கத் தெரியுமா என்றும் கேட்கப்படும்.


அந்த அறையில் நுழையும் முன் அவரது பெற்றோர்கள் வரன் வீட்டாரிடம் எவ்வளவு வரதட்சணை எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டது குஞ்ஜனின் காதில் விழுந்தது. “அவர்கள் 50 லட்சம் ரூபாயிலிருந்து 60 லட்சம் ரூபாய் வரை கேட்டது என் காதில் விழுந்தது. மேலும் அவர்கள் ‘ உங்கள் பெண் அழகாக இருதால், கொஞ்சம் தள்ளுபடி கிடைக்கும்,’ என்று ஜோக் அடித்தார்கள்.”


கடந்த 6 வருடங்களில் குஞ்ஜனின் தந்தை 100-150 வரன்களின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டார், 25 பேர்களுக்குமேல் சந்தித்தார், அதில் 6 பேர் குஞ்ஜனைப் பெண்பார்க்க வந்தனர்


ஆனால், நேரம் செல்லச்செல்ல தள்ளுபடி கிடைக்காது என்பது தெளிவாகிவிட்டது. வந்திருந்தவர்கள் குஞ்ஜனின் தெற்றுப்பல் பற்றியும் அவரது நெற்றியிலிருந்த மச்சத்தைப் பற்றியும் கேட்டனர்.


அவர்கள் தேநீர் அருந்தியபின், வந்திருந்த மாப்பிள்ளையோடு பேச அவருக்குச் சில நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அப்போது அவர், தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறினார். அந்தப் பையனும் வரதசணை ஒரு சமூகக் கேடு என்பதை ஆமோதித்தார். இந்த மாப்பிள்ளை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்று குஞ்ஜன் நினைத்தார்.


ஆனால், வெகு விரைவிலேயே அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த செய்தி வந்தது.


“என் தாய் அதற்கு எனது வரதட்சணை எதிர்ப்பு நிலைதான் காரணம் என்று கூறிக் கோபித்துக்கொண்டார். இரண்டு வாரங்களுக்குமேல் அவர் என்னிடம் பேசவில்லை,” என்கிறார்.


கடந்த 6 வருடங்களில் குஞ்ஜனின் தந்தை 100-150 வரன்களின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டார், 25 பேர்களுக்குமேல் சந்தித்தார், அதில் 6 பேர் குஞ்ஜனைப் பெண்பார்க்க வந்தனர். ஆனால் அனைவரும் வரதட்சணை விஷயத்தில் ஒத்துவராமல் விலகிவிட்டனர்.


இதனால் மனம் வெறுத்துப் போய்விட்டதாகச் சொல்கிறார் குஞ்ஜன். இவர் கணிதத்தில் முதுகலை பட்டம் முடித்து, ஆன்லைன் வகுப்புகள் எடுக்கிறார்.


“நிதானமாக யோசித்தால், பிரச்னை என்னிடமல்ல, வரதட்சணை கேட்பவர்களிடம் தான் என்பது புரியும். ஆனால் இப்போது நான் எனது பெற்றோருக்கு பாரமாகிவிட்டதுபோலத் தோன்றுகிறது,” என்கிறார்.


கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக இருந்தும் 90% இந்தியத் திருமணங்களில் வரதட்சணை கொடுக்கவும் வாங்கவும் படுகிறது. 1950லிருந்து 1999 வரை இந்தியத் திருமணங்களில் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் வரதட்சணை கொடுக்கப்பட்டிருக்கிறது.


பெண்வீட்டார், வரதட்சணை கொடுப்பதற்காக கடன் வாங்குவதும், வீடு நிலபுலன்களை விற்பதும் தொடர்கிறது.


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி, வரதட்சணைக்காக, 2017ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை 35,493 பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 பெண்கள்.


செயற்பாட்டாளர்கள் இந்தியாவில் பெண்குழந்தைகள் குறைவாக இருப்பதற்கு வரதட்சணையும் ஒரு காரணம் என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 4 லட்சம் பெண் சிசுக்கள், பிரசவத்துக்கு முந்தைய பாலின சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டு, கலைக்கப்படுகின்றன, இது வரதட்சணை பயத்தாலேயே நிழல்கிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.


போபால் காவல் ஆணையர் ஹரிநாராயண்சாரி மிஷ்ராவிடம் குஞ்ஜன் மனுவில் அளித்தார்


போபால் காவல் ஆணையர் ஹரிநாராயண்சாரி மிஷ்ராவிடம் அளித்த குஞ்ஜன் மனுவில் இதற்கு ஒரே தீர்வு திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி வரதட்சணை கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் கைது செய்வதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த வாரம் மிஷ்ராவைச் சந்தித்து இந்த மனுவை கொடுத்திருக்கிறார்.


பிபிசியிடம் பேசிய மிஷ்ரா “வரதட்சணை ஒரு சமூகத் தீங்கு. அதை நிறுத்துவதற்கு நாங்கள் முயன்றுவருகிறோம். அனைத்து காவல்நிலையங்களிலும் வரதட்சணை பிரச்னைக்கு தீர்வு தேடி வரும் பெண்களுக்கு உதவுமாறு கூறியிருக்கிறேன்,” என்றார். “ஆனால் போலீசார் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. விழிப்புணர்வின் மூலமே இதை முழுதாகத் தடுக்க முடியும்,” என்றார்.


பெண்ணுரிமைச் செயல்பாட்டாளரான கவிதா ஸ்ரீவஸ்தவா வரதட்சணை ஒரு சிக்கலான விஷயம் என்கிறார். “வரதட்சணை தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்,” என்கிறார் அவர். வரன்களின் குடும்பங்கள் பலமுறை வரதட்சணை கேட்பதும் நடக்க்றது என்கிறார்.


இதெல்லாம் இருந்தும், குஞ்ஜன் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்துடனேதான் இருக்கிறார். “வாழ்க்கை நீளமனது. என்னால் தனியாக இருக்க முடியாது,” என்கிறார்.

No comments

Powered by Blogger.