14 மில்லியன் டொலரை தண்டப்பணமாக செலுத்துமாறு பேஸ்புக்குக்கு உத்தரவு
பேஸ்புக் நிறுவனத்திற்கு 14 மில்லியன் அமெரிக்க டொலரை தண்டப்பணமாக செலுத்துமாறு அவுஸ்திரேலியா பெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு தெளிவூட்டல் இன்றி, கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக பயன்பாட்டாளர்களின் பிரத்தியேக தகவல்களை திரட்டிய குற்றச்சாட்டின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தண்டப் பணத்தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்துமாறும் குறித்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான, மெடா நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
குறித்த செயலினை 271000திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Post a Comment