Header Ads



திருமணத்திற்கு செல்ல அனுமதிக்காத தாய், 13 வயது மாணவி சடலமாக மீட்பு


திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய 13 வயது மாணவியின் சடலம் குளியலறையில்  இருந்து மீட்கப்பட்டதாக  அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த பெண், அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வயங்கல்ல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என்பதுடன், அளுத்கம, அட்டாலுகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.


விடுதியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிய  மாணவி, எதிர்வரும் நாளில் நடைபெறவுள்ள திருமணத்தில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதில் மகள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், அன்றைய தினம்  விடுதிக்கு சென்று பள்ளிக்கு தயாராகும் படியும் மகளை தாய் எச்சரித்துள்ளார்.


அன்றிரவு,  மாணவி கழிவறைக்குச் சென்று நீண்ட நேரம் திரும்பாததால் சென்றதால், அக்கம் பக்கத்தினர் குளியலறையின் கதவை உடைத்து பார்த்தபோது, ​​மாணவி சடலமாகக் கிடந்துள்ளார்.

No comments

Powered by Blogger.