Header Ads



பெண்களை பணத்திற்கு விற்கும் 13 நிலையங்கள்


கடுவெல பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்கும் அனைத்து நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதற்கமைய, அடையாளம் காணப்பட்ட 13 இடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கடுவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நிலையங்களின் பெயர் பலகைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காட்சி புகைப்படங்களையும் அகற்றுவதற்கு கடுவெல பொலிஸார் மற்றும் கடுவெல மாநகர சபை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.