இரும்புக் கம்பியால் வீசியடித்ததில் 12 வயது மாணவன் உயிரிழப்பு
- Ismathul Rahuman -
விளையாட்டு விபரீதமாகி இரும்புக்கம்பியால் வீசியடித்ததில் தலையில் படுகாயமடைந்த 12 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் கட்டான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விளையாடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட முறுகலில் 12 வயது சிறுமி கரும்புக் கம்பிக்கூறால் வீசியடித்ததில் 10 வயது மாணவனில் தலையில்பட்டு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கட்டுவப்பிட்டி சாந்த செபஸ்தியன் வித்தியாலயத்தில் 6 ம் வகுப்பில் கல்வி கற்கும் கஜசிங்ககே சேனால் ரன்தித வெனுருவன் சில்வா என்பவரே மரணமானார்.
இச்சிறுவர்களின் தாய்மார் வெளிநாட்டில் வேலை செய்வதிகவும் இவர்கள் பக்கத்தில் வசிப்பதனால் பாடசாலை முடிந்து வந்து விளையாட்டில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளையாடும் போது இருவருக்கிடையே சச்சரவு ஏற்படுவதுண்டு. சம்பவதிணம் விளையாடும் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட முறுகலில் சிறுமி கம்பிக்கெறால் சிறுவன் மீது வீசி அடிக்கவே அது அவனின் தலையில்பட்டு நடை காயமடைந்துள்ளான்.
சுயநினைவிழந்திருந்த சிறுவன் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்த கொழும்பு தேசிய வைத்தியசிலைக்கு இடமாற்றம் போட்ட தான் பின் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சிறுமியை கட்டான பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுவர்நன்நடத்தை பிரின் பொறுப்பில் வைக்கப்பட்டார்.
Post a Comment