தலைக் குப்புற விழுந்த பஸ் - 10 பேர் படுகாயம்
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெமோதராவில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25 பேர் இருந்ததாகவும், இதில் இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
காயமடைந்த பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரதமாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment