வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் நூற்றுக்கு 100 வீதம் பாதுகாப்பானவை அல்ல
வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் நூற்றுக்கு 100 வீதம் பாதுகாப்பானவை அல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மருந்திலும் 00.1 வீதம் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து பாவனை காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான ஒவ்வாமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சு கணிசமான அளவு மருந்துகளை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதுடன், இந்த நிலைமையானது மருந்துகளில் பிரச்சினை இருப்பது தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் பெரும்பாலான மருந்துகள் அவசரகால கொள்வனவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டவை எனவும், இது தொடர்பில் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment