உடல்களை எரிக்கும் மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த TV மீட்பு
- வி.சுகிர்தகுமார்
கொள்ளையிடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி(டி.வி) மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவமொன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
சடலமொன்றை புதைப்பதற்காக திங்கட்கிழமை (19), வந்திருந்தவர்கள் அங்கு பெட்டியொன்று புதைக்கப்பட்டுள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்தே அப்பெட்டி தோன்றி எடுக்கப்பட்டது.
அந்த தொலைக்காட்சிப் பெட்டி, அக்கரைப்பற்று 8 பிரிவின் பழைய ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை(18) கொள்ளையிடப்பட்டது என கண்டறியப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டில் இருந்த ஜந்தரை பவுன் அளவான தாலி மற்றும் பெறுமதியான தொலைக்காட்சி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரின் தந்தை பொலிஸில் ஞாயிற்றுக்கிழமை (18) முறைப்பாடு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையிலேயே மாயானத்தில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி மீட்கப்பட்டது.
Post a Comment