Header Ads



ஆபத்தான HMPV வைரஸ் பற்றி, விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது


சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என அந்த அமைச்சின் கொவிட்-19 நோய் தொற்று தொடர்பான பிரதான ஒழுங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.


HMPV வைரஸ் அமெரிக்க உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொவிட் தொற்று மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் இந்த வைரஸ் உயிரை கொல்லக்கூடிய சுவாச தொற்றை ஏற்படுத்தும்.


எனினும் இந்த வைரஸ் நாட்டில் இதுவரை பரவவில்லை என்பதுடன், அது தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகளும் அதிக அவதானத்துடன் செயற்படுவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.