Dr சத்தியமூர்த்தியின் உருக்கமான பதிவு
இன்று 29-06-2023 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நேர் எதிராக பயனித்த உந்துருளிகள் விபத்தில் இருவரும் உயிரிழந்தமை பெரும் சோகம்.
விபத்தின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவில் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடுமையான முயற்சி எடுத்தனர். பலனளிக்கவில்லை.
இருவரது குடும்பங்கள், உறவினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மற்றும் நண்பர்களின் அழுகையும் துயரமும் வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவுப் பகுதியை சில மணி நேரம் அவல உணர்வை ஏற்படுத்தியது.
வடபகுதியில் உந்துருளி பயணம் மிகவும் அபாயகரமான செயல். அதிகரித்த வேகம், கவனக்குறைவு, என பல தவிர்க்கபட வேண்டிய விடயங்களில் அக்கறை கொள்வதில்லை.
உந்துருளி பயணிக்கும் முன்னர், மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும்.
Dr Thangamuthu Sathiyamoorthy
Post a Comment