Header Ads



விமானிகளிடம் Call எடுத்து கெஞ்சிய அமைச்சர்


ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானி ஒருவர் நோய்வாய்ப்பட்டால் திட்டமிட்டபடி சேவையை முன்னெடுப்பதற்கு ஏனையவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றார்கள் என அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா விசனம் வெளியிட்டுள்ளார்.


விமானிகளை கடுமையாக சாடியுள்ள அமைச்சர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


ஒரு விமானி நோய்வாய்ப்பட்டவேளை 20 விமானிகள் பணியில் ஈடுபடக்கூடிய நிலையிலிருந்தனர். ஆனால் அன்று அவர்கள் அனைவரும் பணிக்கு சமூகமளிக்கவில்லை நான் ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு பயணிகள் அவதியுறுகின்றனர் .


விமானத்தை செலுத்துங்கள் என கேட்டேன். ஆனால் அவர்கள் எவரும் சாதகமாக பதிலளிக்கவில்லை சகவிமானவோட்டி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விமானத்தை செலுத்த முன்வரவில்லை.


கசப்பான உண்மை என்னவென்றால் கடந்தகாலங்களில் நாட்டுக்காகவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்காகவும் உத்தியோகத்தர்கள் இக்கட்டான நிலைமைகளில் ஒத்துழைத்தார்கள். ஆனால் நான் தொடர்புகொண்டவேளை 20 விமானிகளும் ஒத்துழைக்கவில்லை எனவும் அமைச்சர் கடும் சினத்தை வெளியிட்டார்.


எனவே இவ்வாறான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக ஸ்ரீலங்கன் எயர்லைன்சை மறுசீரமைக்கவேண்டும் என அமைச்சர் கருத்துவெளியிட்டுள்ளார்.


அதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.