கிறிஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் - ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார். இது நியூசிலாந்து மக்கள் மற்றும் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறும்போது,
'இந்த விருதை ஏற்றுக்கொள்வது பற்றி நான் இரண்டு மனதாக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரைவிட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்' என்றார்.
Post a Comment