மகன் கொடூரமாக கொலை செய்யப்பட மூளையாக செயற்பட்ட தாய்
இச்சம்பவத்தில் அக்மீமன, கத்துஹேனவத்தை, கபுஹெம்பல பிரதேசத்தை சேர்ந்த திலிப் நாணயக்கார என்ற 36 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, குறித்த நபரொருவர் தனது தாய்க்கு தெரிந்தே இந்த கொலையை செய்துள்ளார்.
பிரிந்து சென்ற தாய் மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட பழைய பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தாயின் அறிவுறுத்தலின் பேரில் நபர் ஒருவர் இக்கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் தாயையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் ஹல்பதன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment