"இது மயிரால், ஏற்பட்ட பிரச்சினை இல்லை"
இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது,
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் அந்நியோண்யமான வாழும் இன்றைய சூழலில் சில தமிழ் கல்வியலாளர்களும் அரசியல்வாதிகளும் இனவாதமாக செயல்படுவது கவலை தருவதாகும்.
ஒரு முஸ்லிம் மாணவனின் முகத்தில் உள்ள மயிர்களுக்காக அம்மாணவன் பரீட்சை எழுதுவதிலிருந்து தடுக்கப்பட்டமை மிகப்பெரிய அநியயமாகும். இது மயிரால் ஏற்பட்ட பிரச்சினை இல்லை, மாறாக அந்த மாணவன் முஸ்லிம் என்ற இனவாதமே காரணமாகும்.
எத்தனையோ பல்கலைக்கழக மருத்துவ துறை மாணவர்கள் மீசை வைத்துள்ளனர். தலைமுடி வைத்துள்ளனர். பெண் மாணவிகள் தாடியை விட மிக நீளமான மயிரை தலையில் வைத்துள்ளனர்.
நாடியில் உள்ள மயிருக்காக பரீட்சையிலிருந்து தடுக்கப்படுவதாயின் அனைத்து மாணவ மாணவிகளும் மொட்டையடிக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த வழக்கை குரல்கள் அமைப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து பரீட்சை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தமை மூலம் மேற்படி அமைப்பின் சட்டத்தரணிகளின் முயற்சி பாராட்டுக்குரியது.
இந்த விடயத்தை சிலர் மிக சாதாரணமாக பார்ப்பதும் கல்விக்காக தாடியை எடுத்தால் என்னவாம் எனவும் சமூக வலையத்தளங்களில் எழுதுவது கண்டிக்கத்தக்கதாகும்.
அனைத்து சமூகங்களினதும் மத, கலாச்சார அடிப்படை உரிமைகளுக்கு நமது நாட்டின் அரசியல் யாப்பு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றை ஒவ்வொரு சமூகமும் மதிப்பதே பல்லிண மக்கள் வாழும் நாட்டில் இன ஐக்கியத்தை உருவாக்கும்.
சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கெதிராக நீதி மன்றம் செல்ல வேண்டிய தமிழ் பேசும் மக்கள் இன்று சண்முகா அபாயா என்றும் கல்முனை பிரதேச செயலகம் என்றும் தாடி என்றும் தமக்குள்ளேயே முரண்பட்டு நீதி மன்றங்களுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
இந்த வழக்கின் மூலம் அம்மாணவனுக்கு நீதி கிடைக்கப்பெற்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையில் இனியாவது விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
Nice
ReplyDelete