குடும்பத்தினர் இலங்கை வந்துள்ளதாக அறிவிப்பு
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதகர் ஜெரொம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (02) இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெரொம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவன் வௌியில் செல்ல முன்பு உடனே கைது செய்யும் பணியில் பாதுகாப்புத்துறை காட்டிய தீவிரம் முடிவடைந்து விட்டது போல் தெரிகிறது. அதாவது நாடகத்தின் ஒரு பகுதி வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மடத்தனமான இனவாதத்தைத் தூண்டும் தீய சக்திகளை இந்த நாட்டு மக்கள் ஏற்கன வே அடையாளம் கண்டுவிட்டார்கள். ஆனால் இந்தக்கழுதைகளுக்கு ஒருபோதும் உண்மைவிளங்காது. தான் செய்யும் அநியாயம் தான் சரியானது என்ற வழியில் சென்று மக்களையும் நாட்டையும் அழிக்கும் கொடூரத்தில் தான் தொடர்ந்தும் இருப்பார்கள்.
ReplyDelete