இங்கிலாந்திற்கான இலங்கைத் தூதுவராக ரோஹித
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிற்கு நியமனமொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனமானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடமையாற்றும் சரோஜா சிறிசேன அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித போகொல்லாகம கடந்த 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
மேலும் 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த ரோஹித வௌிநாட்டு அமைச்சராக இருந்தபோது பொதுப் பணத்தை பிரயோகித்து நியூயோர்க்கில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களை வாரிஇறைந்து இவருடைய பிறந்தநாளைக் கொண்டாடியவர் மட்டுமல்ல பொதுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்வதில் முதல் நிலையில் வைத்துக் கருதப்படும் வௌிநாட்டு அமைச்சராக பதவி வகிக்க எந்தத் தகுதியுமில்லாத ஒரு நபர். இதனைத் தெரிவித்து தெரிவு சபையில் முறையிட்டு இந்த பெறுமதியான பதவியை தகுதியற்றவர்களுக்குக் கொடுக்க ஆவன செய்யுமாறு நாம் பொதுமக்களையும் உரிய அதிகாரிகளையும் வேண்டிக் கொள்கின்றோம்.
ReplyDelete