Header Ads



சுதந்திரக் கட்சிக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவு


கட்சியின்  யாப்பை திருத்துவது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, கட்சியின் பழைய யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இதுவரை வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவிற்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பழைய யாப்பு செயற்படுத்தப்படும்போது, கடந்த வருடம் செப்டம்பர் 22 ஆம் திகதி திருத்தியமைக்கப்பட்ட கட்சியின் யாப்பு மற்றும் அதிகாரிகள் குழு ஆகியன இரத்து செய்யப்படும். 


இதற்கமைய, சுதந்திரக் கட்சியின் புதிய யாப்பிற்கமைவாக தற்போது சிரேஷ்ட உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பதவிகள் இரத்தாகவுள்ளன. 


அத்துடன், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள சாரதி துஷ்ருமந்தவின் பதவியும் இரத்தாகவுள்ளது. 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய யாப்பிற்கமைய, சிரேஷ்ட உப தலைவர்களாக செயற்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும், கட்சியின் பொருளாளராக செயற்பட்ட லசந்த அழகியவண்ணவும் தொடர்ந்தும் அந்த பதவிகளில் செயற்படவுள்ளனர். 

1 comment:

  1. சிரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது எஸ்டபில்யூஆர் பண்டாரநாயக்கா ஸ்தாபித்து வளர்த்த கட்சி அதன் இறுதித் தலைவியாக சந்திரிகா பண்டாரநாயக்கா இருந்தார்.அவரிடமிருந்து பலாத்காரமாக பதவியை பறித்து எடுத்த இந்த வீணாப்போன மைத்திரி அனைத்து சூழ்ச்சிகளையும் செய்துவிட்டு யாரோ அமைத்துக் காத்த கட்சியை பலவந்தமாகக் கட்டிக் காத்து நீதிமன்றங்களையும் அனாவசியமாகப் பயன்படுத்த முயற்சி செய்கின்றார். இந்த மறுசிராவைத் துரத்தி தலைமைத்துவத்தைக் கைப்பற்ற மிகவும் தேர்ச்சி பெற்ற சட்டத்தரணிகள் ஊடாக முயற்சி செய்தால் அதனை சந்திரிகா சாதிக்கலாம். அதுபற்றி சந்திரிகா தீவிரமாக யோசிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.