Header Ads



இங்கிலாந்து லெஸ்டரில் இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் (படங்கள்)


இங்கிலாந்திலுள்ள லெஸ்டர் மாநகரில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ஒன்றுகூடல் நான்காவது முறையாக நேற்றைய  தினம் (18/06/23)ஞாயிறன்று லெஸ்டர் ரேஸ்கோர்ஸில் இடம்பெற்றது.


இங்கிலாந்து மக்களிடையே மிகவும் பிரசித்த பெற்றதும் கீர்த்திமிக்க இடங்களில் ஒன்றாகவும் கருதப்படும் Leicester Racecourse ல் இடம்பெற்ற இவ்வொன்றுகூடலை லெஸ்டரில் இயங்கும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளினதும் , தன்னார்வ தொண்டர்களின் ஒத்துழைப்போடும் SriLanka Muslim Society-UK (SLMS-UK)அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர். 


இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து சிறப்பித்திருந்த இந்நிகழ்வில் லெஸ்டர் நகர நகராட்சி உறுப்பினர்கள்( Local Councillors), நகர பிதாவின் பிரதிநிதி( Representative of Mayor), கிழக்கு லெஸ்டர் பாராளுமன்ற உறுப்பினர்( MP for Leicester East) , Muslim Council of Briton, Federation of Muslim Organisations ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ,ஏனைய லெஸ்டர் இஸ்லாமிய அமைப்பிகளின் உறுப்பினர்களும் விஷேடமாக இலங்கை தூதரக பிரதிநிதிகளும் வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பகல் 1:00மணிமுதல் இரவு 8:00 மணிவரை இடம்பெற்ற இவ்வொன்றுகூடலில் மதிய உணவோடு, இலங்கைக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு (Muslims contribution to SriLanka) என்ற தலைப்பிலான கண்காட்சியும் , சஞ்சிகை வெளியீடும், இளையோர் பெரியோருக்கான விளையாட்டுகளும், போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


நேற்றைய ஒன்றுகூடலில் குறிப்பிட்ட சதவிகிதம் இளையோருக்கு எல்லா வேளைகளிலும் விசேடமாக முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.  ஏனெனில் வருங்காலங்களில் அவர்களே சமூகத்தை வழிநடத்த வேண்டியவர்கள் ஆவர்.


இடையில் பலத்த மழை பொழிந்திருந்த போதிலும் நிகழ்ச்சிகள் யாவும் உள்ளக அரங்கில் அனைவரினதும் ஆதரவோடும்  மிகவும் குதூகலமாக இறைவனின் உதவியோடு இடம்பெற்று முடிவுற்றது.





No comments

Powered by Blogger.