Header Ads



இரட்டை சதத்துடன், ஹெட்ரிக் - சம்ஹான் சாதனை


இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 2023ஆம் ஆண்டுக்கான 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பிரிவு மூன்று போட்டியில் ஏறாவூர் அறபா வித்தியாலய மாணவன் ஏ.எல்.எம். சம்ஹான் ஹெட்ரிக் மற்றும் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.


ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல் கல்லூரி 9 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.


இதன்போது ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய சம்ஹான் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை பதம்பார்த்தார். தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த அவர் 141 பந்துகளில் 37 பெளண்டரிகள் மற்றும் 06 சிக்ஸர்கள் அடங்கலாக மொத்தம் 209 ஓட்டங்களை பெற்றார்.


இதன்மூலம் ஏறாவூர் அறபா வித்தியாலயம் 04 விக்கெட் இழப்பு 318 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.

No comments

Powered by Blogger.