இந்தக் கேள்வியை கேட்டு, என்னை தொந்தரவு செய்யாதீர்கள்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
”இங்கிருக்கும் யாரைக் கேட்டாலும் அவர்கள் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தான் கூறுவார்கள். அதனால் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டு என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்” என அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தம்மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்ய மாட்டேன் என பொன்சேகா வலியுறுத்தினார். TM
Post a Comment