கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த இளைஞன்
முல்லைத்தீவு மாவட்டம் கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 அகவையுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் உயிரிழக்கும் முன்பாக கடிமொன்றை எழுதி வைத்துள்ளார்.
அதில் கடன் தொல்லையால் தனது உயிரை மாய்த்து கொள்வதாக எழுதிவைத்துள்ளார்.
குறித்த இளைஞன் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment