Header Ads



தோலை வெள்ளையாக்க ஆசைப்பட்டு, புற்றுநோய் மருந்துகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்


சிலர் சருமத்தை வெண்மையாக்க குளுடாதியோன் (Glutathione) தடுப்பூசியைப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது.


புற்றுநோயாளிகளின் சிக்கல்களைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் குளுடாதியோன் என்ற தடுப்பூசியை சிலர் சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தி வருகின்றனர். 


இந்த ஆபத்தான செயற்பாடு தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் அமித் பெரேரா கூறுகையில்,


“சில தனியார் மருத்துவமனைகள் இந்த தடுப்பூசியை அழகுசாதன நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன.


மேலும் சருமத்தை வெண்மையாக்க வரும் வாடிக்கையாளர்களிடம் சுமார் 100,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில அழகு நிலையங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சருமத்தை வெண்மையாக்க வரும் வெவ்வேறு வயதுடைய ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சருமத்தை வெண்மையாக்கவும், பளபளக்கவும் குளுடாதியோன் மாத்திரைகள் மற்றும் க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்படி அனுமதியுள்ளது, ஆனால் தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி இல்லை.


மேலும், தடுப்பூசியைப் பயன்படுத்துபவர்கள் பல பக்க விளைவுகளை உருவாக்குகிறார்கள்.


குறிப்பாகச் சிறுநீரக பிரச்சினைகள், இரத்த நாளங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பல்வேறு தைராய்டு கோளாறுகள்.


இந்த ஊசிகளைப் பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சலூன்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.