ஒரே நாளில் தென்கொரிய மக்களின் வயது குறைப்பு
தென் கொரியா தனது சம்பிரதாயமான வயதை கணக்கிடும் முறைகளை கைவிட்டு நேற்று (28) முதல் சர்வதேச தரத்திற்கு மாறியதை அடுத்து அந்நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வயதால் குறைக்கப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தில் வயதை கணக்கிடும் இரு சம்பியரதாய முறைகளே நீக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சம்பிரதாய முறையின்படி கருவில் இருக்கும் காலம் தொடக்கம் வயது கணக்கிடப்படுவதோடு மற்ற முறையில் உண்மையான பிறந்த திகதிக்கு பதில் ஜனவரி முதலாம் திகதி பிறந்த நாளாக கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில் பிறந்த திகதியை பிறந்த நாளாக கொண்டு வயதை கணக்கிடும் முறைக்கே தென் கொரியா மாறியுள்ளது.
'சம்பிரதாயமாக வயதை கணக்கிடும் முறை சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது' என்று தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யிவோல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போதே இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர் தீவிரம் காட்டினார்.
பாரம்பரிய வயது கணக்கீடு முறைகள் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன. ஆனால், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு அவை கைவிடப்பட்டன.
சர்வதேச வயது கணக்கீடு நடைமுறையை ஜப்பான் 1950ஆம் ஆண்டும், வட கொரியா 1980களிலும் ஏற்றுக் கொண்டன.
Post a Comment