மக்கள் ஆதரவு உண்டென தேர்தலில் நிரூபிப்போம் - அமைச்சுக்காக ஜனாதிபதியின் காலில் விழவில்லை
"மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "மொட்டுக் கட்சியினர் எவரும் அமைச்சுப் பதவி வேண்டும் என்று ஜனாதிபதியின் காலில் விழவில்லை.
அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்க வேண்டும், யாருக்கு வழங்கக் கூடாது என்று முடிவெடுக்க அவருக்கு முழு உரித்துண்டு. மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது.
எனவே மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது. இந்த அரசு மொட்டு அரசுதான்.
மக்கள் ஆணை இன்னமும் இந்த அரசுக்கு உண்டு. எந்தத் தேர்தல் நடந்தாலும், அதை எமது கட்சி நிரூபித்துக் காட்டும்" என தெரிவித்துள்ளார்.
உமது கைவாறு தொடர வேண்டும், அப்போது தான் பொதுமக்களின் வெறுப்பும், பொஹட்டுவ, மஹிந்த சைத்தான்களை ஒதுக்கித் தள்ளும் பொதுமக்களின் போக்கும் அதிகரிக்கும். உமது பொய்மூட்டையைக் கேட்டுக் கேட்டு பொதுமக்கள் சலிப்புடனும் விரக்தியுடனும் காணப்படுகின்றனர். முடியமானால் உமது அங்கல் சாம் இடம் கூறி பொதுத்தேர்தலை உடனடியாக வைக்கச் சொல்லும். அப்போது நாம் அனைவரும் உமது வீரத்தையும் பேச்சின் உண்மையையும் கண்டு கொள்ளலாம். அதுவரை வம்பளந்து கொண்டே இரும்.
ReplyDelete