Header Ads



முஸ்லிம் என்றால் எனக்கு பிடிக்காது


நான் கிறிஸ்த்தவ பள்ளியில் படித்த ஒரு மாணவன் ஆகையால் எனக்கு இயேசுவின் மீதும் மர்யம் மாதவின் மீதும் நம்பிக்கை  பாதி அளவு இருந்தது.

அதே சமயம் முஸ்லிம் என்றால் எனக்கு பிடிக்காது,  ஆரம்ப காலத்தில்  ஆனால் இன்று நானே முஸ்லிம். 


நான் பாதி காலம்  குர்ஆண்ல ஒரு விடயங்களை தேடினேன்  குர்ஆண்ல பொய் இருக்கிறதா   அதை நாம் முஸ்லிம்களுக்கு சொல்லலாம் என்று.


ஒரு சில பக்கங்களை படித்ததும் ஆலு இம்ரான் என்ற அத்தியாத்தில் இருந்து  நான் மர்யம் என்ற வார்த்தையை கண்டேன்.


என்னடா இது மர்யம் என்ற பெயர் வருகிறது என்று என் ஆர்வத்தை தூண்டியது  இன்னும்  எதிர்பார்ப்புடன் படித்தேன்,  அதை தொடர்ந்து ஈசா அலை [இயேசு]  என்ற பெயர் வந்தது, என்னில் இன்னும்  ஆர்வம் அதிகமாகியது.


என்னதான்  சொல்ல வருகிறது இந்த குர்ஆன் என்று,  மேலும் படிக்க தொடங்கினேன், இப்படியே பக்கம் பக்கமாக சென்ற போது..

 

ஆதம்,  இப்ராஹிம், மூசா, தாவுத், ஈசா  என்ற அடுக்காக நபிமார்களின் பெயர் வந்து கொண்டே இருந்தது. சரி  எங்கயாவது பிழை இருக்கிறாதா என்று 


முஹம்மது என்ற மனிதன் தன்னை கடவுள் என்று கூறினார என்று  தேடினேன் 


ஆனால் முஹம்மது மட்டும் அல்ல, ஆதம் இப்ராஹிம் ஈசா முசா தாவுத் இவர்கள் யாரும்மே நான்தான் கடவுள் என்று கூறவே இல்லை,  இவர்கள் அனைவரும் நான் இறைவனின்  தூதார் என்றுதான் கூறினார்கள்


ஆதம் இப்ராஹிம் ஈசா முசா தாவுத் இவர்கள் யாரும்மே நான்தான் கடவுள் என்று கூறவே இல்லை.  இவர்கள் அனைவரும் நான் இறைவின் தூதார் என்றுதான் கூறினார்கள்.


நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் ஒன்று சேர படுவிர்கள்  மனிதனை நாம் விந்து துளிகளில் இருந்து படைத்தோம் என்று  


குர்ஆன் முழுமையாக படித்து முடிக்கிறதுக்கு முன்பே நான் கூறிவிட்டேன்  


அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு இறைவன்  இல்லை என்று முஹம்மது இறைவனின் தூதர் என்று


இந்த குர்ஆண்ணை பொய்ப்பிக்க நினைப்பவர்கள் அனைவரும் தோற்றுப்போவார்கள் என்று நான் உறுதி கொண்டேன்..


ரிஸ்வான் பின் ராமச்சந்திரன் சகோதரர் பதிவிலிருந்து.

No comments

Powered by Blogger.