Header Ads



எனக்கு தமிழ் புரியும் - உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசவும்


தமிழ் செயற்பாட்டாளரொருவரை தமிழில் பேசுமாறு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்திய காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இலங்கை ஜனாதிபதி ரணிலின்  விஜயத்தின் போது,  ரணிலுக்கு எதிராக கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.


இந்த நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத்தமிழர் பிரதிநிதிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி ரணில் சந்தித்திருந்தார்.


குறித்த சந்திப்பின் போது ஐவரில் ஒருவர், ரணில் விக்ரமசிங்கவை நோக்கி கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.


அதன்படி ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன் இலங்கையின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இதற்கு ரணில் பதிலளிக்கையில், “அந்த செயற்பாட்டாளர் என்ன கூற முயற்சிக்கின்றார் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் பேசுமாறும், தனக்கு தமிழ் மொழி புரியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.   

No comments

Powered by Blogger.