வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலில் மோடி
பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோதி கெய்ரோவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதிக்குச்சென்றார்.
எகிப்தில் உள்ள அல்-ஹகிம் மசூதி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியால் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மூன்று மாதத்திற்கு முன் முடிவடைந்தது.
மசூதியை அடைந்த பிரதமர் சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள கலைப் படைப்புகளை பார்வையிட்டார். அங்கு இருந்தவர்களிடம் பிரதமர் உரையாடினார்.
1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இந்த மசூதியை உலக மரபுச்சின்னமாக அறிவித்தது.
இதுதவிர, 'ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறை'க்கும் மோதி சென்றார். முதலாம் உலகப் போரின் போது எகிப்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோதியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும். 1997க்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் எகிப்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.
இது புகழ்பெற்ற அல்-அஸ்ஹர் மசூதியை விட இரண்டு மடங்கு பெரியது.
இந்த மசூதி கிறிஸ்தவ புனிதப் போரின் போது சிறைச்சாலையாகவும், அய்யூபி பேரரசின் சலாவுதீன் காலத்தில் குதிரை தொழுவமாகவும், நெப்போலியனால் கோட்டையாகவும், 1890 யில் இஸ்லாமிய கலை அருங்காட்சியகமாகவும் பின்னர் 20 ஆம் நூற்றாண்டில் ஆண்களுக்கான பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது.
எகிப்தின் நான்காவது பழமையான மற்றும் இரண்டாவது பெரிய மசூதியான அல்-ஹகிம் மசூதி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. bbc
Post a Comment