Header Ads



காதலினால் ஒரு கொலை


- எஸ்.றொசேரியன் லெம்பேட் -


மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில்  சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற  தாக்குதல்  சம்பவத்தில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த கொலைக்கான காரணம் வெளியாகி உள்ளது.


தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரின் 23 வயதுடைய சகோதரர், அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அந்த யுவதியின் வீட்டுக்கு சனிக்கிழமை (17) காலை சென்ற 23 வயதான  இளைளுனை   யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில்,  காயமடைந்த குறித்த இளைஞர்  மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தனது சகோதரர் தாக்கப்பட்ட விடையம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான  இளைஞன், அந்த யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.


  யுவதியின் உறவினர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில்  வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியது. அப்போதே, யுவதியின் உறவினர்கள், குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.


படுகாயமடைந்த  குறித்த இளம் குடும்பஸ்தர்   நானாட்டான் பிரதேச   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவர், ஒரு குழந்தையின் தந்தையாவார்.


உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 சம்பவ இடத்திற்கு  சென்ற   முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.