Header Ads



ஹஜ், உம்ரா யாத்திரிகர்களுக்கு நவீன தொழிநுட்பத்தினூடான வசதிகள்


- Moulavi MA. Mohammed Rafeez -

ஹஜ் மற்றும் உம்ரா ஆகின உலகளாவிய முஸ்லிம்களால் நிறைவேற்றப்படும் புனித கடமைகளாகும். யாத்ரீகர்களின் தேவைகளை எளிதாக்கி அவர்கள் தம் கடமைகளை செவ்வெனே நிறைவேற்ற சவுதி அரேபியா அரசு பலவகையான சேவைகளையும் வசதி வாய்ப்புகளையும் செய்திருக்கின்றது.


ஹஜ் அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில இலத்திரணியல் வசதிகளைப்பற்றிய சிறியதொரு அறிமுகத்தைத் தர விரும்புகின்றேன். இக்கால சூழலில் எல்லா வேலைகளும் கையடக்கத் தொலைபேசியின் செயலிகள் ஊடாக மேற்கொள்ளப்படுவது அதிகரித்துவருவது நாமறிந்ததே. மக்கமா நகர் வரும் ஹாஜிகளின் வசதிகருதி ஹஜ் வணக்கத்தோடு சம்பந்தப்படுகின்ற பல செயலிகளை ஹஜ் அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. அவற்றை இங்கே காண்போம்:


துர்ஜுமான் என்ற செயலி (Turjuman)


இது புனிதஸ்லங்களிலே காணப்படும் பதாகைகள் பெயர்ப்பலகைகள் போன்றவற்றை அவரவர் மொழிகளில் மொழிமாற்றம் செய்து அறிந்துகொள்ளும் வாய்ப்பபை அளிக்கின்றது. இணைய வசதியின்றி இயங்குவது இதன் சிறப்பம்சமாகும்.


ஹஜ் உம்ரா நெவிகேடர் (Hajj Umra Navigator)


 இந்த செயலியின் உதவியுடன் ஹாஜி ஒருவர் மக்கமா மற்றும் மதீனா நகரங்களுடைய வரைபடங்கள், புனிதஸ்தலங்களின் எல்லைகள், ஹாஜிகள் தங்கியிருக்கும் இடங்களின் தகவல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளமுடியும்.


அல் மக்ஸத் (Al Maqsad)


ஹஜ் அமைச்சு வெளியிட்டிருக்கும் மற்றுமொரு செயலி இதுவாகும். புனித கஃபா அமைந்திருக்கும் அல் மஸ்ஜிதுல் ஹறாமின் வரைபடம், ஒருவர் இருக்குமிடம் , அவர் செல்ல வேண்டிய இடங்களுக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த செயலியும் இணையதள வசதியின்றி செயற்படக்கூடியது.


தர்விய்யா (Tarwiya)


ஏழு மொழிகளில் இயங்கும் இந்த செயலியானது யாத்திரிகர்கள் தமது தண்ணீர் தேவைகளை நிவர்த்திசெய்து கொள்வதற்கு வழிகாட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸம்ஸம் நீர் விநியோகிக்குமிடங்கள், தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் தெரிவித்தல், மலசல கூடங்களுக்கான வழிகாட்டிகள், இன்னும் பல பிரயோசனமான தகவல்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.


ஸிஹ்ஹா (Sehha)


ஹாஜிகளுடைய சுகாதார விடயங்களில் சேவைகளை வழங்கும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செயலி. மருத்துவ நிலையங்களுக்கான வழிகாட்டல்கள், அங்கீகாரம் பெற்ற வைத்தியர்களுடன் தொடர்பு கொள்ளவதற்கான முறைமைகள், மருத்துவ சான்றிதழ்களை பார்வையிட்டு சிகிச்சைகளைப் பரிந்துரை செய்வதற்கான வீடியோ உரையாடல்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வசதி போன்ற ஆரோக்கிய விடயங்களில் நல்ல சேவைகளை வழங்கவென இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்இப்னி (Asafny)


அவசர நிலமைகளின்போது உடனடியாகப் புகார் செய்யவும், சரியான இடத்தை வந்தடையவும், விசேட தேவையுடையோருக்கு உதவிடவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


குல்லுனா அம்ன் (Kollona Amn)


 பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார் போன்றோருக்கு உடனடியாகத் தகவல்களை வழங்கும் வசதிகளை இந்த செயலி வழங்குகின்றது. குற்றச் செயல்களை வீடியோவா, படங்களாக , ஒலிப்பதிவு விளக்கங்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாகத் தகவல்களை இதனூடாக வழங்கிடமுடியும். மீட்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த சகல வசதிகளையும் இது கொண்டிருக்கின்றது.


அல் முதவ்விப் (Al Mutawwaf)


புனித மஸ்ஜிதுல் ஹறாமின் வரைபடம், ஹஜ் உம்ரா வணக்கங்களின்போது சொல்ல வேண்டிய திக்ரு துஆக்கள், தமக்கு ஏற்படும் சந்தேகங்கள் பற்றி முப்தி ஒருவருக்கு வினாத் தொடுக்கும் வசதிபோன்ற பல அம்சங்களைக் கொண்ட மிகவும் பிரயோசனமான செயலியாக இது காணப்படுகின்றது.


நனா (Nana)


இது பொருட்களை ஒன்லைன் மூலமாக ஓடர் செய்து பெற்றுக் கொள்ள உதவும். இரைச்சி, மரக்கறி, பழவகை உள்ளிட்ட பதிமூவாயிரம் பொருட்களை ஓடர் செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹாஜி இருக்குமிடத்திற்கு பொருட்கள் கொண்டுவந்து தரப்படும்.


கரீம் (Careem)


இது வாகனங்களை முன் பதிவு செய்துகொள்வதற்கான செயலியாகும். பல்வகை வாகனங்களையும் சாரதியோடு வாடகைக்கு அமர்த்திக் கொள்வதை இலகுபடுத்தும் செயலியாக இது காண்ப்படுகின்றது.


அல்ஹரமைன் (Al Haramain)


இது இரு புனிதஸ்தலங்களின் தலமையகத்தின் சேவைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், ஹஜ் மற்றும் உம்ரா போன்ற புனித வணக்கங்களுக்காக வருபவர்களுக்கு உயர் தொழிநுட்பவசதிகளைப் பயன்படுத்தி சேவைகள் செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டடுள்ளது.


அறபாத் சேமன் (Arafath Sermon)


அறபா தினத்தன்று அறபா பெருவெளியிலே நடாத்தப்படுகின்ற குத்பாப் பேருரையை செவிமடுக்கவும் அதனை விரும்பிய மொழியில் மொழியாக்கம் செய்து கேட்கவும் இது உதவிடும்,

இத்தனை முன்னாயத்த நடவடிக்கைகளைச் செய்யும் அன்புள்ளங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. இந்தவருடம் ஹஜ்ஜுக்காகச் சென்றிருக்கும் அனைவரது ஹஜ் வணக்கத்தை அல்லாஹ் ஏற்று அருள் புரிவானாக. ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து ஆவலோடு காத்திருக்கும் அனைவருக்கும ;ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் அருளுவானாக.


மூலம்: ஹஜ் அமைச்சின் இணையதளம்

No comments

Powered by Blogger.