டொலரின் பெறுமதி குறைந்தாலும், மக்கள் பட்டினியில் வாடுவது ஏன்..?
அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்தாலும் நாடு முழுவதிலும் மக்கள் பட்டினியில் வாழ்ந்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஒரு அமெரிக்க டொலர் சுமார் 400 ரூபாவாக காணப்பட்ட காலத்திலும், பொருட்களின் விலைகள் இவ்வளவு உயர்வடைந்திருக்கவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வலுவாக காணப்படுவதாக அசராங்கம் அறிவித்த போதிலும், உண்மையில் டொலரின் விலை மற்றும் குறைந்துள்ளதாகவும் மக்கள் பட்டினியில் வாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரியளவில் வரியை விதித்து அரசாங்கம் நிவாரணங்களை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment