'திப்பு சுல்தான்' இலங்கைக்கு வந்தது
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் PNS ‘திப்பு சுல்தான்’ இன்று (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நல்லெண்ண விஜயமாக வருகை தந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
PNS ‘திப்பு சுல்தான்’134.1 மீ நீளமுள்ள போர்க்கப்பலாகும். கெப்டன் ஜாவாத் ஹுசைன் தலைமையிலான இந்தக் கப்பல் 168 பேர் கொண்ட குழுவினருடன் வருகை தந்துள்ளது.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளினது கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, PNS ‘திப்பு சுல்தான்’ எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
Post a Comment