ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் மொட்டுக் கட்சி
"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்" என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொது வேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் அறியத்தருவோம்.
நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் தலைவர்களில் நாட்டுக்குத் தலைமை தாங்கக் கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே.
இதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பறைசாற்றிக் காட்டும்" என தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியும் பிட்டுக் கட்சியும் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தேர்தல் தான் தீர்மானிக்கும்.
ReplyDelete