Header Ads



முதல் ஹஜ் குழு இலங்கையிலிருந்து புறப்பட்டது (படங்கள்)




இன்று 04/06/2023, ஞாயிற்றுக்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில்  தூதுவர் / காலித் ஹமூத் அல்-கஹ்தானி கலந்து கொண்டார். 


இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ. எம். பைசல், இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர்  இப்ராஹிம் சாஹிப் அன்சார், சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் ஹஜ் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 


அங்கு தூதுவர் ஒரு சிறு உரையை ஆற்றினார். அவர் தனது உரையில், உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தரும்  ரஹ்மானின் விருந்தினர்களை சவூதி அரசாங்கம் பெரிதும் வரவேற்பதாகவும், இரு புனிதஸ்தலங்களினதும்  பாதுகாவலரின் அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு வருகைதரும் யாத்ரிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும், அவர்களின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும், தமது ஹஜ் கிரியைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 






No comments

Powered by Blogger.