குப்பை சேகரித்தால், தங்கக் காசு
காஷ்மீரின் சாதிவாரா கிராமத் தலைவர் தன்னுடைய கிராமத்தை சுத்தம் செய்ய தனித்துவமான ஒரு போட்டியை அறிவித்தார். அதிக குப்பையை சேகரிப்பவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்பதே அந்தப் போட்டி.
இந்தப் போட்டியில் வென்று இரண்டு இளைஞர்கள் தங்க நாணயம் வென்றுள்ளனர். இந்தப் போட்டி அந்தக் கிராமத்தில் தூய்மைக்கான தன்னார்வ கலாசாரத்தையும் தற்போது உருவாக்கியுள்ளது. இந்த யோசனையை கிராமத்தலைவரின் மனைவிதான் அவருக்குக் கொடுத்தார்.
திரும்பிய பக்கமெல்லாம் குப்பைமேடாக காட்சியளித்த சாதிவாரா கிராமம் தற்போது சுத்தமாகி விட்டதாகக் கூறுகிறார் அந்தக் கிராம தலைவர் ஃபரூக் அகமது கனே. BBC
Post a Comment