Header Ads



முஸ்லிம் சமய திணைக்கள, பணிப்பாளர் தூங்குகிறாரா..?


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


கபூ­ரியா அர­புக்­கல்­லூரி அதனைத் தோற்­று­வித்­த­வர்­களின் விருப்­பத்­திற்கு ஏற்­பவும் அதன் உறு­தியில் கூறப்­பட்ட பிர­கா­ரமும் அப்­துல்­கபூர் அறக்­கட்­ட­ளையின் படியும் தொடர்ந்து அதன் சேவை­யினை சமூ­கத்­திற்கு வழங்கும் அதே­வேளை அதன் மாண­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து கல்­வி­யையும் உறுதி செய்யும் என நம்­பிக்­கை­யாளர் சபை அறி­வித்தல் வெளி­யிட்­ட­போதும் நோன்­பு­கால விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட 57 மாண­வர்கள் இது­வரை கல்­லூ­ரியில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. அவர்கள் தொடர்ந்தும் வீடு­க­ளிலே இருக்­கி­றார்கள் என கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.


கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்க செய­லாளர் ஐ.எல்.டில்சாத் மொஹமட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; மே மாத ஆரம்­பத்தில் கபூ­ரியா அர­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்­காகத் திறக்­கப்­பட்­டுள்­ளது என கல்­லூ­ரியின் நம்­பிக்­கை­யாளர் சபை மக்­களின் பார்­வைக்கு பொய்­யான அறி­வித்­த­லொன்­றி­னையே வெளி­யிட்­டுள்­ளது. கல்­லூ­ரியின் மாண­வர்கள் விடு­மு­றையின் பின்பு இது­வரை கல்­லூ­ரியில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கல்­லூ­ரியின் நுழைவாயில் அவர்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டுள்­ளது.


ரமழான் விடு­மு­றையின் பின்பு கடந்த மே மாதம் 9 ஆம் திகதி திரும்பி வந்த மாண­வர்கள் நிர்­வா­கத்­தினால் திருப்பி அனுப்பி வைக்­கப்­பட்­டார்கள் என்றும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இதே வேளை கல்­லூ­ரிக்கு மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­ப­டா­ததால் மாண­வர்­களும் பெற்­றோரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் முறைப்பாடுகள் செய்தும் அவை விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.-Vidivelli

1 comment:

  1. கபூரியா மதரஸாவின் மாணவர்களை அனுமதிப்பதும் அவர்களுக்கு அனுமதி மறுப்பதையும் விசாரித்து நியாய தீர்ப்பு வழங்கும் பணி முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளரின் பணியல்ல என்பதை இதனை எழுதி மேற்படி பணிப்பாளருக்கு சேறு பூசும் தொழிலை இதனை எழுதிய பரீல் என்பவர் உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு யாரும் நியாயத்தை வழங்க முன்வராவிட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். மாணவர்களுக்குரிய நியாயமாக அவர்களின் கல்வி தொடர்வதை நிச்சியம் நீதிமன்றம் உறுதி செய்யும். அதுதவிர சமூகத்தில் பேராசை பிடித்த இறையச்சமில்லாத நபர்களைப் பின்தொடர்வது முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளரின் பணியல்ல என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.