Header Ads



முஸ்லிம்கள் எங்களுக்கு முன்மாதிரியாக வாழ்கின்றனர், முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு நாட்டுக்குத் தேவை


ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க வீழ்ச்சியுற்ற நாட்டை மீளவும் கட்டியெழுப்புகின்ற முயற்சிகளுக்கு முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பு மிக அவசியமாகும். முஸ்லிம் இளைஞர் சமூகம்   இந்த நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ள அதேவேளை தற்காலத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். அதற்காக நான் பெருமைப்படுகின்றேன் என்று  அமைச்சர்    கப்பல் துறைமுக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின்  73 ஆவது வருடாந்த தேசிய மாநாடு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின்  73 ஆவது வருடாந்த தேசிய மாநாடு   24-06-2023  பதுளை கெப்பிட்டல் சிட்டி ஹோட்டலில் தேசிய தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  தபால் மற்றும்  முறைமுக அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா அவர்களும், கௌவர அதிதியாக  ஊவா மாகாண ஆளுநர் எம். ஜே. எம். முஸம்மில், சிறப்பு விருந்தினராக  பங்களதேஸ் நாட்டின் உயர் ஸ்தானிகர் தாரிக் எம்டி அரிபுல் இஸ்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


முஸ்லிம் மக்கள் எங்களுக்கு முன்மாதரிமிக்கவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.  அன்று  வெளிநாட்டர்கள் கடல் மார்க்கமாக வருகை தந்த போது சிங்கள அரசர்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அப்பொழுது அரபு நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக ஆண்களே வந்தனர். இந்நாட்டிலுள்ள சிங்கள பெண்களையே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். உங்களை எங்களில் ஒருவராகவே நாங்கள் மதிக்கின்றோம். அதே போன்று முஸ்லிம் மக்கள் மூலம்  வர்த்தக ரீதியான நடவடிக்கைகளின் போது இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவேர்ப்பவர்களாக இருந்து வருகிறார்கள். நாங்கள் அதற்காக மிகவும் பெருமைப்படுகின்றேன்.


முஸ்லிம் மக்கள் வர்த்தக தொழில் துறைசார்ந்தவர்கள் என்ற எண்ணக்கரு மாற்றம் பெற்று இன்று  அறிவு ரீதியிலான  பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். சட்டத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி கல்வித்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி  வைத்தியத் துறையிலும் சரி எல்லாத் துறைகளிலும்  சிறந்து விளங்குகின்றனர். விசேடமாக திறன்மிக்க சட்டத்தரணிகள்,  வைத்திய நிபுணர்கள், கணக்காளர்கள் புத்தி சாதுரிமானவர்கள் காணப்படுகின்றனர். நான் அதற்காகப் பெருமைப்படுகின்றேன. 


அது இன்னும் அதிகம்  அதிகம் இளைஞர்கள் அறிவியல் ரீதியாக  அதிகரிக்கப்பட  வேண்டும். அவர்களுக்காக அறிவியல் ரீதியாக கல்வி ரீதியாக சந்தர்ப்பம் வழங்கப்படுதல் வேண்டும். முஸ்லிம் பெண் பாடசாலை ஒன்றை இந்த மாவட்டத்தில்  உருவாக்கியுள்ளேன் என்ற  அடிப்படையில் நான் பெருமைப்படுகின்றேன்.  அல் அதான் மகா வித்தியாலயத்திற்கு இடைக்கிடையே என்னுடைய பங்களிப்பை நல்கி வருகின்றேன். அப்பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்களை பெற்றுக் கொடுத்து வருகின்றேன்.


அதே போன்று உங்களது   சமூக அமைப்பு விசேடமாக இந்த நாட்டுக்குத் தேவையான இனங்களுக்கிடையே  சமாதான சகவாழ்வு தொடர்பில்  தெளிவூட்டல்களை ஏற்படுத்த வேண்டும். அதன் காரணமாக வ இளைஞர்களை முன்மாதரியாகவும் கொண்டு உங்கள் சங்கங்களில் நல்ல பதவிகள்  வழங்கி நாட்டில் காணப்படும் பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை  அதிகரித்தல் வேண்டும். ஒரு நிலையான பயணத்திற்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுடைய நம்பிக்கையினை மேலும் வெற்றிகொள்வராக இருத்தல் வேண்டும்.


உலகிலே காணப்படும்  மாற்றங்கள் எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது. எனினும்  எங்களுடைய சமூகத்தில் சாதாரண முறையில் சமூக மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். விசேடமாக அரசியலுக்குள்   சமய  ரிதியிலானன பிளவுகளை ஏற்படுத்துவதை விட அவற்றை  ஒருமுகப்படுத்தி   அரசியல் பயணத்தை மேற்கொள்ளுகின்ற நிலையில் முஸ்லிம் மக்களும் முன்வருதல் வேண்டும்.    


அதிகளவு சமூக ரீதியாக பிளவுபட்டிருக்கிறார்கள்,  சமய ரீதியாகப் பிளவுபட்டு இருக்கிறார்கள்.    அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூகம் சமயத்திற்காக உருவாக்குப்படுவதில்லை. தங்களுடைய  கொள்கை வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்படுவதாகும். இந்நாடு பொருளாதார  நெருக்கடியால் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களினால்    முன்னெடுக்கப்படும் சவால்களுக்கு  உங்களது பங்களிப்பு அவசியமாகும். நாட்டைக் கட்டி எழுப்புகின்ற பங்களிப்பு மிக அவசியம் ஆகும். அதுதான் உண்மையான உள்ளார்ந்த பங்களிப்பாக அமையும்.


நான் சமீபத்தில் பங்களதேஸ் நாட்டுக்கு விஜயம் செய்தேன். அங்கு கடற்துறை அமைச்சருடன்  இந்து கடல் சமுத்திரம் தொடர்பில் கலந்துரையாடி பின்னர்  நாட்டின் பிரதமர் சேஹ் ஹசீனா அவர்களை நேரில் சந்தித்து உரையாடக் கிடைத்தது. இதன் மூலம் இலங்கை பங்களதேஸ் இரு நாடுகளுடைக்கிலான நட்புறரீதியிலான  உறவ மேலும்  வலுப்பெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.


அதேவேளையில் பெண்கள் மத்தியிலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து அவர்களுக்கிடையே போட்டிகளை ஏற்படுத்தி பரிசில்களை வழங்க முன்வருதல் வேண்டும் என்று அவர்மேலும் தெரிவித்தார்.


இக்பால் அலி


No comments

Powered by Blogger.