கோவணத்துடன் வீதியில் இறங்கிய விவசாயிககள்
தமது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என தெரிவித்து அம்பலாந்தோட்டை நகரில் விவசாயிகள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணி நடைபெற்றது.
நெல் விலை குறைந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் விவசாயிகளை அநாதரவான நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் தெரிவித்து இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிக பொருட்செலவில் தயாரான நெல் அறுவடை செய்துள்ள போதிலும், அதற்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யாமல், அரசு மௌனம் காத்து கறுப்புச் சந்தைக்காரர்கள் தங்கள் விருப்பப்படி விலையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
இந்நிலைமையால் விவசாயிகளுக்கு நெல்லுக்கான உரிய விலை கிடைக்கவில்லை எனவும் இதனால் விவசாயிகள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் சுமார் 400 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அம்பலாந்தோட்டை விவசாய சேவை நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் அம்பலாந்தோட்டை மணிக்கூட்டு கோபுரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டதன் பின்னர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
Post a Comment