முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை கண்ட சிறுமி, சுவிஸர்லாந்தில் நிகழ்த்தப்போகும் சாதனை
ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே சாதனையை படைத்துள்ளார்.
தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தார்.
தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி நிர்வாகம் ( Gymnasium ) தொடரலாம் என்ற அனுமதியுடன் தொடர்ந்தார்.
அங்கும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து 6 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது, மனதில் மருத்துவத்துறைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.
விடவில்லை தன் முயற்சியை தொடர்ந்தாள் . அவளது மருத்துவத்துறை கனவை நனவாக்கி, தற்போது Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்துள்ளார் தமிழிசை.
தமிழிசையின் தாயார் வனஜா புலிகளின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றி இருந்தவர் ஆவார்.
Post a Comment